யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் இலட்சுமணன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல் -எம்
வாழ்காலம் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமதுகுடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை
18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை யாழ் கீரிமலை
புனித தீர்த்தக்கரையில்
நடைபெற்று அதனைத்தொடர்ந்து 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் வீட்டுக்கிரிகைகள் நடைபெறும்.
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...