யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் இலட்சுமணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் - உங்கள்
நினைவுகள் நெஞ்சில் நீங்காமல் வாழுதே!
காலம் தந்த காயங்கள் ஆறவில்லை - உங்கள்
கனிவான முகம் மட்டும் மறையவில்லை!
உழைப்பையே உயிர்மூச்சாய் கொண்டவரே! - எம்
உயர்விற்கு ஏணியாய் நின்றவரே!
நிழல் தந்து எங்களைக் காத்தவரே - இன்று
நிஜமாக எம்மிடம் இல்லையே ஏன்?
அன்பெனும் கடலில் எங்களை நனைத்தீர்கள்
அறிவெனும் ஒளியில் பாதையை சமைத்தீர்கள்
கண்களில் வழிகின்ற கண்ணீர்த் துளிகள் - உங்கள்
காலடியில் சமர்ப்பிக்கும் பாமாலை மொழிகள்!
வீட்டின் விளக்காகத் திகழ்ந்தவரே - எங்கள்
வாழ்வின் வழிகாட்டியாய் இருந்தவரே!
சொல்லாமல் நீங்கள் சென்ற தூரம் - எங்கள்
நெஞ்சத்தில் ஆறாத பெரும் பாரம்!
மீண்டும் வருவீரோ என ஏங்குகிறோம் - உங்கள்
மேலான புகழைத் தினமும் போற்றுகிறோம்!
எங்கு இருந்தாலும் எங்களைக் காத்திடுங்கள் - உங்கள்
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்!
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...