யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அச்சுவேலி மண்ணில் அவதரித்த அருந்தவப்புதல்வனே
அன்னை தந்தை சொல் கேட்டு வளர்ந்தவரே!
அன்புச் சகோதரர்களின் பாசத்திற்குரியவரே!
கைப் பிடித்தவளைக் கண்கலங்காமல் காத்தவரே!
பிள்ளைகள் எட்டைப் பெற்றெடுத்தவரே!
பெற்ற பிள்ளைகளைப் பாசத்துடனும் அன்புடனும் வளர்த்தவரே
தன்னைப் போல் பிறரை நேசித்தவரே!
தர்மம் செய்வோம் என்றும் செய்தும் காட்டியவரே!
காலத்தின் கோலத்தால் உமை நாம் பிரிந்தோம்!
காலத்தின் கோரத்தால் இன்று அழுது புலம்புகிறோம்!
அன்பின் அடையாளமே எமதாருயிர் அப்பாவே!!!
நாட்கள் முப்பத்தொன்று ஆகினாலும் - உங்கள்
நினைவுகள் நீங்காது என்றுமே! எமைவிட்டு.....
உம் இனிய முகம் தினம் வந்து எம் கண்ணெதுரே...
உருச்சிலையாய் தினம் தினம் வாட்டுதையா...
இன்றும் எம் மனம் ஆறாத்துயரோடும்
உமது மீளா நினைவலைகளோடும்
விழிநீரோடு வழி கடந்து செல்கின்றோம்!
விளக்கேற்றி உம் ஆத்ம சாந்திக்காக!
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
விண்ணில் பிறையோடு ஒரு விடி வெள்ளியாய்
உமது வம்சத்திற்கு வழிகாட்டிட
இன்னுயிர் துறந்து இறையோடு கலந்த உமக்கு
கண்ணீர் மலர்தூவி அஞ்சலிக்கின்றோம் இந்நாளில்.....
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை
தினம் தினம் வேண்டி நிற்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எமது அன்புக் குரிய அப்பாவின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.