2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகன் செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/08/2022
ஆண்டுகள் இரண்டு ஆன
போதிலும்
நீங்களின்றிய
துயரங்கள்
இன்னும்
ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம்
குலதெய்வமே
பணிகின்றோம்
உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த
கரங்களும்
நாம் ஆழ்ந்து
உறங்கிய பாச மடியும்
இன்பம்
தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள்
இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட
போதிலும்
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம்
அப்பா
மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான
எங்களின் தேடல்கள்
எங்கள்
உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்