யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா அருணாசலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இணையில்லா தெய்வமே இறைவனடி சேர்ந்தீரே
இதயம் நொறுங்கிப் போனதுவே- நீங்கள்
எம்மோடு இல்லையென்று நினைக்கும் ஒரு கணம்!
சிரித்து மகிழும் வதனத்தை நிதம் பார்த்து வந்தோமே
நினைத்து மனம் ஆறுதில்லை- அம்மா
தாங்கள் கதைத்துப் போன வார்த்தைகளை- எமை
விட்டு விட்டு நீண்ட நெடும் பயணம் சென்றதேனோ?
எமக்கு தெய்வம் உண்டென்றால் அது தாங்கள் தானம்மா
என்றும் எம்மை வழிநடத்தி ஆசிர்வதிப்பீர்கள் தாயே!
உங்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில்
நிம்மதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்
எங்கள் பாசத்தின் இதயமே அம்மா எனும் குடும்ப குலவிளக்கு மறைந்த செய்திக்கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்துகொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
துயருறும் உங்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். Rest in peace.