யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா அருணாசலம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-10-2022
மறைந்து மூன்றாண்டுகள் கடந்தாலும் -அம்மா
நீங்கள் இல்லாத நாட்களை- நாம்
என்றுமே நெஞ்சினில் நினைத்ததில்லை
எம்மோடு வாழ்ந்து மறைந்த தெய்வமே
என்றும் தாழ் பணிந்து வணங்குகிறோம் தாயே!
வாஞ்சையோடு எமை அழைத்து வருடிய கைகளும்
பாசமாக பகிர்ந்த உணர்வுகளும்
பசுமரத்தாணிபோல்
எம் இதயத்தை நிறைத்திருக்கும் தாயே!
எத்தனையாண்டுகள் கடந்தாலும் தெய்வமாக
எம்மோடு வாழ்ந்திருப்பீர்கள் தாயே!
எச்செயல் செய்யினும் அம்மா என அழைப்போம்- இன்று
எம்மருகில் இல்லையென இயம்பியே அழுகின்றோம்- அம்மா
உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும்- பிள்ளைகளை
தெய்வமாய் இருந்து காத்திடுவீர்கள் அம்மா...
உங்கள் ஆத்மா இறைவன்
திருவடி நிழலில்
இளைப்பாற
நாமும் பிரார்த்திப்போம் தாயே!
ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
துயருறும் உங்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். Rest in peace.