Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUN 1934
இறப்பு 24 OCT 2019
அமரர் நாகம்மா அருணாசலம் (திருப்பதி)
வயது 85
அமரர் நாகம்மா அருணாசலம் 1934 - 2019 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா அருணாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று கடந்து சென்றதம்மா- நீங்கள்
வாழ்ந்த நினைவுகளும் சுவடுகளும்- எம்
நெஞ்சில் நிறைந்து நிற்குதம்மா!
கடவுள் எமக்குத் தந்த உயிர் என்பதா- இல்லை
கடவுளிலும், உயர் என்று சொல்வதா?

நிகரில்லாத எம் சுவாசமே தாயே- எங்கள்
மனம் தினம் தினம் ஏங்கும் உறவும்  “அம்மா”
ஆறுதல் கூறவோ  அணைத்துக் கொள்ளவோ
உம்மைப் போல் யாருமில்லையம்மா- உங்கள்
வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏதுமில்லை இவ்வுலகில்!

வாஞ்சையுடன் வருடிய கைகள் நேர்த்தியாக
எமக்குக் கற்றுத் தந்த பணிகள்- எம்மை
நேர்மையான பாதையில் வழிகாட்டி- தரணியில்
தன்னம்பிக்கையுடன் வாழக் கூறிய வார்த்தைகள்
பக்கத்தில் இருந்து கதைத்த கதைகள்- எவ்வருடம்
ஆனாலும் எம்முள் நிலைத்து நிற்கும் தாயே!

எங்கள் கண் மொழியில் எம் நிலையும்- எமது
குரல் ஒலியில் எம் வலியும் அறிவாயம்மா- உந்தன்
அருகில் தோள் சாயும் போது துன்பத்தின்
சுவடுகளும் தொலைதூரம்- புன்னகை
சிந்தும் வதனமும் கனிவு நிறை பேச்சாலும்
எல்லோரையும் வரவேற்று பசியாற்றி மகிழ்வீர்கள்!

எளிமையை நேசித்து பொறுமையை தனதாக்கி
அன்போடும் அறத்தோடும் வாழ்ந்த இல்லத்தரசி- நீங்கள்
சொல்லும் செயலாலும் யாரையும் புண்படுத்தி பார்த்ததில்லை
இல்லையென்ற சொல் உம்மிடத்தில் நாம் கண்டதில்லை
இப்படியொரு தாய் எம்மருகில் இல்லையென்று
நினைக்கும் போது எம் இதயம் கணக்கிறது தாயே!

ஆசிகள் கூறி அரவணைத்துப் பார்த்தீர்கள்- உம்
அடி தொழுது வாழ்ந்த பிள்ளைகள் நாம்- இனி
எப்பிறப்பில் காண்போம் தாயே!- உங்கள்
ஆன்மா இறைவன் திருப்பாதத்தில் இளைப்பாற
கண்ணீரால் மலர் தூவி நாமும் பிரார்த்திப்போம்- எம்
குல தெய்வமாய் என்றும் இருந்து காப்பாய் தாயே!

அன்புடன் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 23 Nov, 2019