யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி தங்கமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-09-2023
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா
இன்முகம் எங்கேயம்மா
ஈன்றவளே எம் தாயம்மா
உயிர்போடு காத்தாயம்மா
ஊர் பற்றுடன் வளர்ந்தாயம்மா
எட்டுத் திக்கும் பறந்தாயம்மா
ஏட்டுப் பதிகங்கள் படித்தாயம்மா
ஐயம் தவிர்த்தாயம்மா
ஒற்றுமையே உயர்வு என்றாயம்மா
ஓம் என ஓலித்தாயம்மா
ஔவியம் காத்தாயாம்மா
அஃது அழியாது உன் நினைவம்மா!!
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் தினத்தோறும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்