Clicky

பிறப்பு 19 APR 1931
இறப்பு 16 JAN 2021
அமரர் நாகமணி செல்லம்மா
வயது 89
அமரர் நாகமணி செல்லம்மா 1931 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுரேஷ் (ஐக்கியராட்சியம்) 17 JAN 2021 United Kingdom

இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும், நேரடியாகத் துயர வீட்டில் கலந்துகொண்டவர்களுக்கும் மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாமாகவே முன் வந்து உணவு, சுகாதாரம் மற்றும் எண்ணில் அடங்கா உதவி செய்து தோள் கொடுத்து உதவிய அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மம்மாவினுடைய வாழ்க்கை ஓர் நீண்ட பக்கம் கொண்டது. இளம் வயதில் தன்னுடன் கூடப்பிறந்தவர்களுக்கு ஓர் தாயாகவும் பின்பு தான் பெற்றவர்களுக்கு நல்லதொரு அன்னையாகவும் விளங்கியவர். அவரின் மிடுக்கான பேச்சும் அதிலுள்ள நேர்மையும் எங்களைக் கவர்ந்தவை. இப்பொழுதும்....... . தமிழர் பண்டிகைக் காலங்களில் அவரிடம் "கைவிசேடம்" வாங்கக் காலையில் ஓடிய நாட்களும், எழுது கருவி (pensil) , அப்பியாசப் புத்தகங்கள் வாங்கித்தந்து படிக்க ஊக்கமளித்த நாட்களும் இன்று வரை என்னால் மறக்க முடியவில்லையே? இப்படி இன்னும் பற்பல பசுமையான நினைவுகள்..... .. " அம்மம்மா", காலச்சக்கரம் சுழல்கிறது, காரியங்கள் பல படைத்து விட்டீர்கள். அமைதியாகக் உங்கள் கண் இமை மூடி உறங்குங்கள். உங்களது மீளாத் தூக்கத்தை தொலை தூரத்தில் நின்று நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்கின்றோம். என்றும், மூத்த பேரன் சுரேஷ் மற்றும் குடும்பத்தினர்.

Tributes