
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமன், அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலமுரளி, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாக்ஷனா, நித்சரண், ஜிவானோ, ஸ்ரெவானோ, ஜெலினா, ஜஸ்மிண்டா, ஸ்ரேயா, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
புத்திமதிகள் பல சொல்லி
நாம் புரியும்படி பல கதைகள்
சொல்லி சஞ்சலம் இன்றி இல்வாழ்வு
வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லி
எம்மை செம்மையாக அனைவரையும்
அன்புடன் அரவணைப்பவர்!
மண்ணில் எங்கள் வாழ்வதனை நாளும்
கண்ணில் மணிபோல் காத்து நின்றீர்- இன்று
விண்ணில் இருந்து வழி நடத்தும்
மண்ணில் அடங்கா உன் அன்பை இழந்தோம்
உங்களை இழந்து ஓராண்டு சென்றாலும்
ஆற்றமுடியாத துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
மரியாதைக்குரிய மறைந்த முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர் பஞ்சண்ணா விளையாட்டுகளிற்கு இளம் பிள்ளைகளை ஊக்கமிடுவதிலிருந்து, கிராமத்தை முன்னேற்றுவதற்கான...