Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 AUG 1973
உதிர்வு 02 MAR 2023
அமரர் நாகலிங்கம் சிவராசா (சிவா)
வயது 49
அமரர் நாகலிங்கம் சிவராசா 1973 - 2023 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse Colmar ஐ வாழ்விடமாகவும், Argenteuil தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!

ஆண்டு மூன்று மறைந்து விட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: அரசி(மனைவி) ,டிலானி ,டிரோஷி, டிலானா, டொய்ஷி(பிள்ளைகள் )

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 04 Mar, 2023
நன்றி நவிலல் Sat, 01 Apr, 2023