
கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse Colmar ஐ வாழ்விடமாகவும், Argenteuil தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-03-2025
அழகான வாழ்க்கையிலே
நிலவாக வந்தவரே
மனதோடு போராடுதே-எம்
மறையாத ஞாபகங்கள்
உயிரின் ஒரு பாதி பறி போனதே
என் தனிமை நிலையானதே
கடவுளின் உருவம் நீங்கள் என
கற்பனை செய்து வாழ்ந்தேனே
பூமியில் வாழ்க்கை இது தான் என்று
கற்றுத் தந்து சென்று விட்டீர்
நித்தம் நித்தம் என் கண்ணுக்குள்
நிறைந்து நிற்க்கும் என்னவரே
நினைவெல்லாம் உங்களை
சுமந்தெல்லோ நிற்கின்றேன்
அன்பையும் அறிவையும் அள்ளித் தந்து
அழகாக கல்வியூட்டி வாழ வளி காட்டி
தினம், தினம், எம்மை
நெஞ்சில் சுமந்தீர்கள் அப்பா
உங்களுக்கு நிகர் இவ்வுலகில்
வேறு ஏதும் இல்லை அப்பா
காலம் கடக்காது கடவுளாக மறைந்தீரே
நேரம் கடக்காமல் நினைவுடனே வாழ்கின்றோம்
அப்பா உங்கள் மூச்சு உள்ளவரை
எங்களுக்காக வாழ்ந்தீர்கள்
எங்கள் மூச்சில் இப்போ
உங்களைத் தான் சுவாசிக்கின்றோம்
ஈராண்டு காலம் உருண்டு மறைந்தாலும்
உங்கள் உயிர் மூச்சு எம்மை விட்டு மறையாது
ஈராயிரம் யுகங்கள் ஓடி முடிந்தாலும்
உங்கள் நினைவு முடிவதில்லை
நீங்கள் எங்களுக்கு அப்பாவாக கிடைத்தது
கடவுள் எமக்கு தந்த வரம்
சுழல்கின்ற பூமியில் நீங்கள் தான்
எங்கள் உயிர், எம் உலகம்
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
ஓடோடி வந்திடுங்கள் எங்களிடம்
என்நாளும் எமக்காகவே வாழ்ந்தீர்கள்
கண் உறங்கும் வேளையிலும்
நம் குடும்பம் நினைத்தீர்கள்
உங்களாலே நாங்கள் இன்று
உயர்ந்து நிற்கின்றோம்
என்றும் எங்களை காக்கும் தெய்வம்
நீங்கள் தானப்பா- உங்கள்
அருளின்றி எமக்கிங்கு வாழ்வு ஏதப்பா?
ஈராண்டு மட்டுமல்ல
உயிருள்ளவரை அஞ்சலிப்போம்....
உங்கள் ஆத்மா சாந்தி பெற என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் நினைவோடு வாழும்
உங்கள் மனைவி, பிள்ளைகள்!!!