Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 MAY 1952
மறைவு 06 JUN 2021
அமரர் நடேசு இராஜேஸ்வரி
வயது 69
அமரர் நடேசு இராஜேஸ்வரி 1952 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசு இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறைந்த அன்பின் உருவம்....!!!! 

அம்மா ! அம்மா !
நீயே உயிரெழுத்தின் முதலெழுத்து
உலகில் என்னை விட்டு பிரியாத கடைசி எழுத்தே
எனக்கு உயிர்கொடுத்த என் பிரம்மனே!!!!

ஓராண்டு என்ன நூறாண்டுகள் சென்றாலும்
உன் பிரிவால் வாடும் எனக்கு
என் கண்கள் சிந்தும் மழையை
கட்டுப்படுத்த தெரியவில்லை!!!

என் அண்டமும் நீ
ஆசையும் நீ
அறிவும் நீ
நான் முதலில் என் நாவினால்
உச்சரித்த உன்னத வார்த்தையும் நீ
நான் எடுத்து வைத்த முதல் அடியின் முதல் படியே
நான் இப்பாரியில் பிறக்கையில்
உன் அன்பு கரங்கள் கொண்டு தாங்கினாய்
நான் மண்ணில் சாயும்போது என்னை
ஏந்துவாயா....?

வருவேன் உன்னிடம்
நீ எனக்கு கொடுத்த பணியை
பக்குவமாய் முடித்த பிறகு
மறுபடியும் என்னை ஏந்த வா
நான் சாயும்போது!!!

ஆக்கமும் உணர்வும்
நடேசு சதீஸ்வரன்.

தகவல்: குடும்பத்தினர்