யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எனும் ஆலவிருட்சம்!
காலம் ஒருமுறை சுழன்று விட்டது
கண்ணீர் மட்டும் இன்னும் காயவில்லை!
எம் வீட்டின் சுடராய் இருந்து
வழிநடத்திய தலைமைப் பண்பு எங்கே?
தடுமாறும் போது தாங்கிப் பிடித்து
எம்மை வளர்த்தெடுத்த அந்தத் தங்கம் எங்கே?
பிள்ளைகள் நாம் பாசத்திற்கு ஏங்குகிறோம்
மருமக்கள் ஒரு தாயின் அரவணைப்பைத் தேடுகிறார்கள்
பேரப்பிள்ளைகள் உங்கள் மடியில் சாய்ந்து
கதை கேட்கத் துடிக்கிறார்கள்!
இப்படி ஊரே வியக்கும் ஒரு குடும்பத்தை
ஒன்று சேர்த்து வழிநடத்திய உன்னதத் தலைவி நீயம்மா!
"அம்மா" என்ற ஒரு சொல்லுக்குள் - உங்கள்
ஆணையைச் சிரமேற்கொண்டு வாழ்ந்தோம்!
சகோதர சகோதரிகள் நாங்கள் ஒருபோதும்
உங்கள் சொல் தட்டியதில்லை
உங்களை
மீறி ஒரு அடிகூட வைத்ததில்லை!
கட்டுக்கோப்பாய் எமைப் பிணைத்து வைத்த
அந்த
கனிவான அதிகாரமும் அன்பும் எங்கே?
வெற்றிடம் என்பது வெறும் வார்த்தையல்ல
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நொடியும்
எம் வாழ்வின் ஒவ்வொரு அடியும்
நிழல் தொலைத்த நிஜமாய் தவிக்கிறோம்!
அதிகாரத்தால் எம்மை ஆளவில்லை நீங்கள்
உங்கள்
அன்பால் மட்டுமே எம்மை ஆட்கொண்டீர்கள்!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
மீண்டும்
உங்கள் கருவிலே பிறக்க வரம் வேண்டும்!
கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தாலும்
எம் இதயத் துடிப்பில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள்!
சித்தி விடைபெறுவதில் நான் மனம் உடைந்தேன். எங்கள் வாழ்க்கையை அன்பு, சிரிப்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளால் நிரப்பினீர்கள். உங்கள் கருணை உங்களை அறிந்த அனைவரையும் தொட்டது. நீங்கள் மறைந்தாலும்,...