யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாட்கள் எத்தனை ஆனாலும்
எம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
முழுநிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம் .
கனவில் நீ வரும் பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய் என்று
அது கனவென்று தெரிந்ததும்,
கதறுகின்றேன் தனிமையில் இன்று...
கடைசி வரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு ..
எங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலன் உன்னை கவர்ந்து ...
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இனறவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை காரைநகர் பாலாவோடை அந்தியேட்டி மடத்தில் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து, 21-04-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அன்னாரின் வண்ணார்பண்ணை இல்லத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், பின்னர் Lakshmi Plaza இல,84 ஐய்யனார் கோயில் வீதி, தட்டாத்தெரு சந்தி(அருகாமையில்) ந.ப 12:00 மணியளவில் மௌன பிரார்த்தனையும், மதிய போசனவிருந்தும் நடைபெறும். இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சித்தி விடைபெறுவதில் நான் மனம் உடைந்தேன். எங்கள் வாழ்க்கையை அன்பு, சிரிப்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளால் நிரப்பினீர்கள். உங்கள் கருணை உங்களை அறிந்த அனைவரையும் தொட்டது. நீங்கள் மறைந்தாலும்,...