
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(முகமையாளர் SVM Pvt. Ltd- கொழும்பு), திருமகள்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருட்செல்வம்(லண்டன்), தனுஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தன்சி, குருதாஸ், குருராம், சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்மபாலன், விஜயரட்ணம், சத்தியலிங்கம், கணேசலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி, அம்பிகைபாகன், காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், யோகராணி மற்றும் இரத்தினபூபதி, இரதிஸ்வரி, செல்வராணி, வசந்தகுமாரி, நல்லலிங்கம், மகேந்திராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
22, பிரப்பன்குளம் லேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சித்தி விடைபெறுவதில் நான் மனம் உடைந்தேன். எங்கள் வாழ்க்கையை அன்பு, சிரிப்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளால் நிரப்பினீர்கள். உங்கள் கருணை உங்களை அறிந்த அனைவரையும் தொட்டது. நீங்கள் மறைந்தாலும்,...