2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா
(காத்தான்)
பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராய சுவாமி ஆலய தர்மகத்தா
வயது 70
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா
1951 -
2022
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா இரட்ணசிங்கம் அவர்களின் 02ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் இரண்டு சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்