Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1937
இறப்பு 11 OCT 2019
அமரர் நடராசா மங்கயற்கரசி (மங்கை)
வயது 82
அமரர் நடராசா மங்கயற்கரசி 1937 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மங்கயற்கரசி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
 முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
 முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே

அம்மா நாம் கண் திறந்த போது
 உங்கள் திருமுகத்தை கண்டு புன்னைகைத்தோம்
அன்று உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
 எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா

அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை ஆயிரம் சொந்தங்கள்
அருகினிலே இருந்தாலும் அம்மா
 உங்களைப் போல் யார் வருவார்

அவணியிலே இருப்பிறவி அடைபவர்கள்
அகிலத்தின் உச்சியிலே அமர்ந்திடுவர் -அம்மா
நீங்கள் நடந்த பாதையோரம் செல்கின்றோம்
வழியில்லை நடப்பதற்கு விழிநீர்கள் தான்
 சொரிகின்றன விடையில்லை இவ்வுலகில்
எமக்கம்மா விடைதேடி கடவுளை வேண்டுகின்றோம்

ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
 உங்கள் பிரிவால் துயறுரும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்