யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மங்கயற்கரசி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூகவலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந் நிகழ்வில் அனைவரையும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன், மதியபோசன வைபகத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மதிய போசனம் நடைபெறும் இடம்
10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00
50 place de Torcy,
75018, Paris,
Metro n°: 12
Station: Marx Dormoy
Bus: 38, 60, 35
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்!!!