Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 27 APR 1934
ஆண்டவன் அடியில் 13 OCT 2024
அமரர்கள் நடராஜா மகேஸ்வரி நடராஜா சசிவண்ணன்
வயது 90
அமரர்கள் நடராஜா மகேஸ்வரி நடராஜா சசிவண்ணன் 1934 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் நடராஜா மகேஸ்வரி:-

அன்னை மடியில் 27 APR 1934 - ஆண்டவன் அடியில் 13 OCT 2024 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா மகேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
  

அமரர் நடராஜா சசிவண்ணன்
அன்னை மடியில் 01 JAN 1970 - ஆண்டவன் அடியில் 21 OCT 1988

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உன் நினைவுகளுடன் நாம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mathy kuperan Family Germany

RIPBook Florist
Germany 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Krishna Puma Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos