Clicky

நினைவஞ்சலி
அன்னை மடியில் 27 APR 1934
ஆண்டவன் அடியில் 13 OCT 2024
அமரர்கள் நடராஜா மகேஸ்வரி நடராஜா சசிவண்ணன்
வயது 90
அமரர்கள் நடராஜா மகேஸ்வரி நடராஜா சசிவண்ணன் 1934 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

அமரர் நடராஜா மகேஸ்வரி
அன்னை மடியில் 27 APR 1934 - ஆண்டவன் அடியில் 13 OCT 2024

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா மகேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அமரர் நடராஜா சசிவண்ணன்
அன்னை மடியில் 01 JAN 1970 - ஆண்டவன் அடியில் 21 OCT 1988  

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
 எம்முடன் பிறந்தவனே
எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...

அமைதியின் அடைக்கலமாய்...
 அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்... நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
 இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீசென்றாய்?
உடன் பிறப்பே உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்.

பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய
நாம் துவண்டு விட்டோம்
 புன்னகையோடு காணாமல் போனவனே
 கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே

வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
 வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
 அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!

காலங்கள் தேய்திடுனும் உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
 மீண்டும் வாராயோ உன் பிரிவால் துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mathy kuperan Family Germany

RIPBook Florist
Germany 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Krishna Puma Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos