மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஆனந்தராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 12-12-2025
ஆயிரம் பிறவி எடுத்தாலும்
உங்களது துயர் மனதை விட்டு நீங்காது...
ஈருயிர் ஓருயிராக இணைந்து வாழ்ந்தோம்
தனியனாய் தவித்தின்று
எப்பிறவியில் உங்களை நான் இனி காண்பேன்
என எண்ணி ஏங்குகின்றேன்...
அன்பு பண்பு பாசத்தோடு
நல்ல கணவராய் வாழ்ந்த
வாழ்கையை எண்ணி
மனம் மாய்ந்து
துன்பத்தில் துவண்டு துவள்கிறேன்...
ஆண்டுகள் முன்று ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
முன்று வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில்
ஓயாத அலைகளாய் ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
பேபி அண்ணாவை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.