Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1941
இறப்பு 13 DEC 2022
அமரர் நடராஜா ஆனந்தராஜா (பேபி)
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 81
அமரர் நடராஜா ஆனந்தராஜா 1941 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 20-11-2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஆனந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை மகிழ்வித்து
 எனது அன்பிற்கினிய கணவனாக
உமது குழந்தைகளுக்கும் ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே...

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஈராண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்