Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1941
இறப்பு 13 DEC 2022
அமரர் நடராஜா ஆனந்தராஜா (பேபி)
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 81
அமரர் நடராஜா ஆனந்தராஜா 1941 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஆனந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02-12-2023

உம் உயிரில் கலந்தவரையும்
 உம் உயிர் துளியில் ஜனித்தவர்களையும்
 பரிதவிக்க​ விட்டு நீவீர் இறையடி சேர்ந்து
 யுகமொன்று நொடியாய் கடந்தது அப்பா.

உண்மையும் நேர்மையும்
அணிகலனாகக் கொண்டு
நிமிர்வாய் வாழ்ந்த தெய்வமே.

புன்னகை முகத்தில் மிளிர​
 எழுத்தறிவித்து குடும்ப​ உறவுகளைச்
சொல்லி தந்த ஆசான் நீங்கள் அப்பா.

மனைவி மீது மிகையான​ காதலுடனும்
 பிள்ளைகள் எம்மீது அன்பும் பட்சத்துடனும்
 வாழ்ந்த​ அப்பா நீங்கள் தான் இன்னும்
 எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
 ஏங்கி தவிக்கும் உமது துணைவிக்கு
துணைவனாக​ கலங்கி துடிக்கும்
உங்கள் மக்களுக்கு அப்பாவாக​
 மருகும்  மருமக்களுக்கு மாமாவாக
தேடிக் கரையும் பெயரன்கள் பெயர்த்திகளுக்கு
தாத்தாவாகப் பிறக்க​​ வேண்டும்
என்று இறைவனை வேண்டுகின்றோம்.

"ஓம் கம் கணபதயே நம​."

உங்கள் நல் ஆத்மா சாந்தியடைய​
எல்லாம் வல்ல​ பிள்ளையாரப்பாவையும்,
பையிரவரையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்