10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மயில்வாகனம் கந்தையா
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி, கணக்காளர்- UK
வயது 74
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் பிரிந்து பத்து வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும் வர
ஆண்டவனை வேண்டுகிறோம்
உம் பாசப்பிணைப்பினால்
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய் வையத்தில்
வாழ்ந்த உங்கள் அன்புள்ள
ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
தகவல்:
மனைவி(மங்கா)