
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கந்தையா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-04-2025
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும்
என் இதயம் இருண்டுதான் இருக்கின்றது
எனக்கு வாழ்க்கைத் துணையாய்
என்னைத் தாங்கும் தூணாய் என்னோடு
நடைப்பயணம் நடத்துவீர்கள் என்று
நான் எல்லாம் நம்பியே இருந்தேன்
ஆனால்
எந்தவித சலனமும் காட்டாமல்
சாவுக்கு சம்மதப்பட்டதேன்?
உங்கள் பாசம் உருகாத
நெஞ்சங்களையும் உருக வைக்கும்
சொரியாத கண்களையும் கண்ணீர்
சொரிய வைக்கும் நீங்கள் என்னை
விட்டு தெரியாத இடம் தேடி பறந்ததேன்?
கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உங்கள் முகத்தை நான்
யாரிடமும் இன்னும் அறியலையே...
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் உங்கள் குடும்பத்தினர்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!