7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மயில்வாகனம் கந்தையா
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி, கணக்காளர்- UK
வயது 74
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கந்தையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு கணவரோ!
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!
தகவல்:
குடும்பத்தினர்