2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முத்துராஜா ஜெயந்தன்
பிரபல வர்த்தகர்- La Chapelle
வயது 47
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராஜா ஜெயந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான வார்த்தை எங்கே
அழகான சிரிப்பு எங்கே
பணிவான நடை எங்கே
பண்பான குணம் எங்கே
இதையெல்லாம் பறித்தவன்
தான் எங்கே...
நீ விடுமுறையை நினைத்து பறந்தீர்
நாம் பிரிவை நினைத்து புலம்புகிறோம்!
வாழ்வில் நிலைகுலைய வைத்த பிரிவு
தொலைந்தது ஆனந்தம் மட்டுமல்ல
பாசத்தால் பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வெங்கும் எம் உயிர் நெஞ்சில் நீ நிறைந்தாய்
கனவுகளற்ற நினைவுகளோடு கடக்கின்ற
ஒவ்வொரு நிமிடமும் உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அப்பா
உங்களை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாலும்
என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களிடம்
வருவோமென்று ஆறுதலுடன் வாழ்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்