1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துராஜா ஜெயந்தன்
பிரபல வர்த்தகர்- La Chapelle
வயது 47
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராஜா ஜெயந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
விழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்