வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா ஜெயந்தன் அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா, ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் ஜெயபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஹினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆஷிகா, அம்பர்ஆகீஷ், அஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமளா(இலங்கை), முகுந்தன்(பிரித்தானியா), காந்தன்(ஜேர்மனி), சகுந்தலை(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கதாஸன், சுகந்தி, ஜோன்பப்திஸ்த், பிரதீஸ், தமிழ்வாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீர்த்தனா, தனுஷ்யன், பிருத்விராஜ், சுருதியா, ஜெரோம், ஜொக்சில், ஜொக்சிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினுஷி அவர்களின் அருமை சிறிய தந்தையும்,
சர்வீன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.