அமரர் மயில்வாகனம் முத்துவேலு
பிறப்பு: 09-04-1921
இறப்பு: 05-07-2011
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் முத்துவேலு அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
அப்பா நீங்கள் இறையடி எய்து
15 ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீங்கள் எம்மோடு
கூடிக்குலாவிய நாட்கள் ஒன்றென்ன
பல தசாப்தங்கள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான புன்னகை முகத்தை
தொலைத்து விட்டு அமைதியற்று வாழ்கிறோமே
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்...
அமரர் முத்துப்பிள்ளை முத்துவேலு
மலர்வு: 10-12-1926
உதிர்வு: 07-03-2023
கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!
இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று
வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!
மூன்றாண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!
கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!
ஆண்டு மூன்று சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்...
அன்பான இளையப்பம்மாவின் நினைவு நாளில் துயர் பகிர்கிரோம்.