கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் – நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி
எங்களை உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை
எமக்கு உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும்
காலம் இனி என நாம்
மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்பான இளையப்பம்மாவின் நினைவு நாளில் துயர் பகிர்கிரோம்.