

அமரர் மயில்வாகனம் முத்துவேலு:
பிறப்பு: 09-04-1921
இறப்பு: 05-07-2011
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் முத்துவேலு அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்!
அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை
மனது ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
-----------------------------------------------------
அமரர் முத்துப்பிள்ளை முத்துவேலு:
மலர்வு: 10-12-1926
உதிர்வு: 07-03-2023
கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை
நெஞ்சம் அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா
என்று கல்லறை வாழ்வில் நெடுங்காலம்
சென்றாலும் எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்பான இளையப்பம்மாவின் நினைவு நாளில் துயர் பகிர்கிரோம்.