5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு திருநாமம்
வயது 67
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு திருநாமம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது!
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்!
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் அப்பா!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த
எமது அன்புத் தெய்வமே அப்பா
உங்கள் நினைவலைகள் என்றும் எம்
நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
Miss you anna 😔