4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு திருநாமம்
வயது 67
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு திருநாமம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Sinnaijah.. forever you are in our mind.. Rest In Peace