யாழ். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகேசு திருநாமம் அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி யேக்கப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசிந்தா(சந்திரா), லங்கா ஆகியோரின் அன்புக் கணவரும்,
குபேறா, வெஸ்லி, பிறவுண்சன், சமீறா, டிலான், கெலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, காலஞ்சென்ற திருவருட்செல்வம், விமலா, சிவானந்தம், கமலா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், கெளசலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றூபா, ராஜா, சுபாசினி, பிறேம், றசல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜேன், செலினா, றெமோ, றான்சிலி, றிமி, ஜெறி, ஒமேறா, எய்டன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-12-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Miss you anna 😔