Clicky

பிறப்பு 19 JAN 1933
இறப்பு 18 MAR 2021
அமரர் முருகேசு சண்முகராசா
நயினை நாகபூஷணி அம்பாள் அமுதசுரபி ஸ்தாபகர், அமைப்பாளர், சமூக தொண்டர்
வயது 88
அமரர் முருகேசு சண்முகராசா 1933 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 MAR 2021 United Kingdom

நயினை மண் தந்த உத்தமரே உறங்குகின்றீர் உலகத் தாய் மடியில் அன்னையை நாடி ஓடி வந்த அடியவர்க்கு அள்ள அள்ளக் குறையாத ஆபுத்திரன் தந்த அமுத சுரபியில் அள்ளிக் கொடுத்தவரே ! பஞ்சணையில் நீழ் துயில் கொண்டது ஏனோ ? மருகர், மருகர் என அழைத்த ஓசை மௌனமாகியது ஏனோ ? வதனி, வதனி என வாயார அழைத்த குரல் ஓய்ந்ததும் ஏனோ ? அள்ளி அணைத்து முத்தம் சிந்திய தாத்தாவே ! ஆழா துயரில் ஆழ்த்தி மீளா துயில் கொண்டது ஏனோ ? தொட்டிலிலும் கட்டிலிலும் அள்ளி அணைத்து முத்தம் தந்த தாத்தாவே எமை தரணியிலே தவிக்க விட்டு மீளா துயில் கொண்டது ஏனோ ? தவிக்கிறோம் கண் திறந்து பாராயோ ? வைகறை வேளையில் வைரவன் மணி ஓசை கேட்கையில் என்றும் விழித்திடுவாய் இன்று மணி ஓசை கேட்கவில்லையா ? கண் திறந்து பாராயோ ? செய்வதறியாமல் சிந்தை கலங்கி கதறி அழுகின்றோம் கொடியவன் கொரோனாவின் குளப்படியால் கூடி வாடியே குடும்பத்துடன் கதறுகின்றோம் நாடி ஒடுங்கும் சேதி அறிந்தும் ஓடி வர முடியவில்லையே தேவியின் பாதம் தேடிச் சென்ற உங்கள் ஆத்மா சாந்தியடைய அகிலாண்ட கோடி பரமேஸ்வரியாக வீற்றுருக்கும் அன்னை நாக பூஷணி அம்மனின் பாதார விந்தங்களை வேண்டுகின்றோம் !! ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி ! அன்பு மகள் சந்திரவதனி , மருமகன் முருகபத்மராஜா பேரப்பிள்ளைகள் - ஸ்ரீஹரி , ஸ்ரீதாஸ், சகானா, ஸ்ரீராகவி, யுகேந்திரன் பூட்டப்பிள்ளைகள் - அமரா ஸ்ரீதேவி, ஆகனா சகாதேவி மருமகன் முருகபத்மராசா

Tributes