

ஆலமரமொன்று இன்று நயினை மண்ணில் அடிசாய்ந்ததோ வேராடு விழுது விட்ட பெரு விருட்சம் எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ.? வானத்து நிலவாய் வலம் வந்து அன்னையவள் அமுதசுரபி அன்னதானமடத்தில் அரும்பணி யாற்றிய அற்புதமே இப்பிறவியல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமை போன்ற அருமருந்தை எம் மண் உயிரான உறவுப்பூவே ஐயா...? பாசத்தின் உறைவிடமே பண்பின் ஔிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளைக் கைவிட்டுச் சென்றதேனோ.? பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே ஐயா...? மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துணிக்கைகளை காணிக்கையாக்குகின்றோம்.. ? அன்புக்கும் பண்புக்கும் ஓர் தாயாய் தந்தையாய் ஆளாகி 88 வயதளவில் இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டுபல இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகி விட்டன்றோ? ? விதியின் வினைப்பயனாய் விண்ணுலகிற்கு சென்று விட்டீர்கள் ஐயா...? அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடனா அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே, உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனைப் பிராத்திக்கிறோம்.? மண்ணோடு உங்கள் பூதவுடல் மறைந்து விட்டாலும் நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை .பாச நினைவுகளை எம்முடன் விட்டுச் சென்றீர்கள் ஐயா..? உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்தி பெற பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ?

Rest In Peace