



வெள்ளை நிற வேட்டி . அதே நிறத்தில் பவுண் போன்ற பட்டன்களுடனான நஷனல் தோளில் பல்நிறங்களுடன் கூடிய கோட்டுத் துவாய். கழுத்தில் தங்கச் சங்கிலி . ஆலய மரபுச் சால்வைகள். நெற்றியில் விபூதிக் குறியுடன் சந்தணமும் குங்குமமும். இவ்வாறான அலங்கரிப்புகளுடன் பவனி வருபவர் தான் எங்கள் ராசா. கையில் வேல் இல்லாத சண்முகன்.அழகன். சுமார் நாற்பது வருடங்களாக சாயிபாபாவை தியானித்து நிலையான சமித்தி அமைக்க அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டவர். அன்னை நாகபூஷணியை ஆரத் தழுவியவர். அமிழ்ந்து கிடந்த அமுத சுரபியைக் கையில் எடுத்து அரும் பசியாற்றியவர் . சொல்லில் அடங்காச் சமய சமூகத் தொண்டாற்றி குடும்பத்தையும் தொண்டுக்காய் அர்ப்பணித்தவர். சொந்த உழைப்பிலேயே வாழ்ந்தவர். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று கணேச கனீஷ்ட மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியரையும் தந்து ஊதியத்தையும் அவர்களே வழங்கினார். இவற்றைவிட இன்னும் எண்ணற்றவையைச் சொல்லலாம். மனிதம் நிறைந்த புனிதமான சித்தப்பா அன்னையின் அமுத சுரபியில் இருந்து அன்னையின் அருட்சுரபியில் இரண்டறக் கலந்து கொண்டார். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஜெய் சாயி ராம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Rest In Peace