யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..!
எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்
பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்
புன்னகையோடு காணாமல் போனவனே
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!
காலங்கள் தேய்திடுனும் உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன ஊரே உனை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ உன் பிரிவால்
துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!