1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு பவளம்
வயது 87

அமரர் முருகேசு பவளம்
1934 -
2022
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் La plaine Saint Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு பவளம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
தகவல்:
குடும்பத்தினர்