Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 23 AUG 1932
இறைவன் அடியில் 24 AUG 2024
அமரர் முருகேசு பராசக்தி 1932 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பலாலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகேசு பராசக்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு
ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள
வரை நாமென்றும் அஞ்சலிப்போம்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்