யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பலாலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு பராசக்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"அமரர் முருகேசு பராசக்தி
அவர்களின்
திதி நிர்ணய வென்பா"
ஆண்டு குரோதி ஆவணி அபரபட்ஷ
பூண்ட ஷஷ்டித் திதியதனில் - நீண்ட
நெடுவாழ்வு வாழ்ந்த முருகேசு பராசக்தி
நடனசீவன் தாளடைந்தார்.
அன்பால் அரவணைத்து ஆதரவாய் வழிகாட்டி
இவ்வையகத்தே எம் ஒளி விளக்காய்த் திகழ்ந்து
நிலையற்ற வாழ்வின் நிலைகளை எமக்குணர்த்தி
ஊர்ந்த சிந்தனைகளை எமக்களித்த
எம் குடும்ப ஒளி விளக்கே! பாசத்தின் உறைவிடமே!
பண்பின் சிகரமே அன்பைப் பொழிந்து
அறிவை ஊட்டிய தெய்வமே!
தங்களை என்றும் மறந்திடோம்.
தங்கள் கால்தடங்களையே பின்பற்றுவோம்.
நாம் உங்கள் அறிவு வழியில்
நீன்றும் தவற்போம்.
எம்மை
நல்வழிப்படுத்திய
அன்புத் தாயே!
எமது இல்லத்தில் தங்கள் அன்பு அறியாது
இருக்க தினம் தினம்
தங்கள் நித்திய ஆத்ம
சாந்திக்கு
எல்லாம் வல்ல சிவபெருமானின் பாதர விந்தங்களை வணங்கி
இந் நினைவு மலர்தனை எமது கண்ணீர் நிறைந்த
காணிக்கையாக தங்கள்
பாதங்களில்
சமர்ப்பிக்கின்றோம்.
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே அரசியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற பிள்ளைகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to the family. May her soul Rest In Peace.💐