Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 23 AUG 1932
இறைவன் அடியில் 24 AUG 2024
அமரர் முருகேசு பராசக்தி 1932 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பலாலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகேசு பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்

குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே

நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்