Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 FEB 1951
இறப்பு 25 FEB 2021
அமரர் முருகேசு முத்தையா 1951 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முத்தையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ அப்பா....  

கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்

மனைவி பிள்ளைகளோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு அப்பா...!   

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டு
வழிதெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

இரண்டு ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!   

என்றும் உங்கள் நினைவில்
அன்பு, மனைவி, மகள், மருமகன், சகோதரங்கள், உறவுகள்!

தகவல்: குடும்பத்தினர்