Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 FEB 1951
இறப்பு 25 FEB 2021
அமரர் முருகேசு முத்தையா 1951 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சம் நிறைந்தவரின்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆருயுயிர்த் துணையே அருமை அப்பாவே
 பாசம் கொண்டு அழைத்திடும் உடன்பிறப்பே
அன்பும் பண்பும் கொண்ட மாமாவே
 தேசம் விட்டு நீங்கள் பிரிந்திட்ட நாள்முதல்
அப்பாவின் ஆசை முகம் காணத்தவிக்கின்றோமே
ஆண்டு ஒன்று வந்தும் எம் அழுகை தீரவில்லையப்பா
கண்ணில் தெரிந்திடும் காந்தச்சிரிப்பும்
 மனங்களில் பதிந்திட்ட உங்கள் நினைவுகளும்
கண்ணீரில் அழிந்திடுமோ
 நாம் வாழும்காலமெல்லாம் மறப்போமா உங்களை
அப்பா எங்களோடு இருந்திட்ட காலங்கள்
இனிய பொற்காலங்கள்இனி என்று வருமோ இறைவா
அப்பாவின் இனிய நல் ஆத்மா இறையடியில்
 நித்திய சங்கமமாக இறைவனைவேண்டுகிறோம்
 ஓம்சாந்தி!
அன்பு மனைவி மகள் மருமகன் சகோதரங்கள் உறவுகள்

தகவல்: குடும்பத்தினர்