திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, அளம்பில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-06-2022
எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய்
எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும்
எல்லாம்
எங்கள் நன்மைக்கே
நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!
உதிரத்தை உரமாக்கி
மெழுகாக
உந்தனை வருத்தி
எமை இவ்வுலகில்
நல்வாழ்வு வாழ வழிவகுத்த தெய்வமே
என்றும் வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!