யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும், ஜேர்மனி Münster, Stuttgart, Karlsruhe ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனி Freiburg ஐ தற்போதைய கொண்ட மோகனதாஸ் சோதிலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு - இன்று
அணைந்து போய் விட்டதே.....
காலன் அவன் செய்த சதியோ - இல்லை
உன் தலையில் எழுதிய விதியோ
கூடி வாழ்ந்த காலங்கள் மிக குறைவே
பிரிந்து வாழ்ந்தோமே....
அலைபேசியில் எம் அன்பை
தினமும் பகிர்ந்தோமே....
மணக்கோலமதில் உணைப்பார்க்க
மனமகிழ்ந்தோமே.... நீயோ
பாசத்தின் வலைக்குள் எங்களை கட்டி
காணாதூரம் சென்றாயோ....
மீளத் துயரில் நாம் - மீண்டு
வர முடியாமல் சென்று விட்ட
உன்னை எண்ணி - தினமும்
கண்ணீர் துளிகளுடன் - உன்
உறவுகள் இங்கே......
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தி அடைய இதயபூர்வமான வேண்டுகின்றோம். குடும்பத்தினர்க்கு எமது ஆறுதலை தெரிவிக்கின்றோம்..