Clicky

நினைவஞ்சலி
அன்னை மடியில் 06 NOV 1977
இறைவன் அடியில் 10 APR 2021
அமரர் மோகனதாஸ் சோதிலிங்கம்
வயது 43
அமரர் மோகனதாஸ் சோதிலிங்கம் 1977 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும், ஜேர்மனி Münster, Stuttgart, Karlsruhe ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனி Freiburg ஐ தற்போதைய கொண்ட மோகனதாஸ் சோதிலிங்கம் அவர்களின் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு - இன்று
அணைந்து போய் விட்டதே.....
காலன் அவன் செய்த சதியோ - இல்லை
உன் தலையில் எழுதிய விதியோ
கூடி வாழ்ந்த காலங்கள் மிக குறைவே
தொலைதூரமதில் திக்குகள் நான்காய்
பிரிந்து வாழ்ந்தோமே....
அலைபேசியில் எம் அன்பை
தினமும் பகிர்ந்தோமே....
மணக்கோலமதில் உணைப்பார்க்க
மனமகிழ்ந்தோமே.... நீயோ
பாசத்தின் வலைக்குள் எங்களை கட்டி
காணாதூரம் சென்றாயோ....
மீளாத் துயரில் நாம் - மீண்டு
வர முடியாமல் சென்று விட்ட
உன்னை எண்ணி - தினமும்
கண்ணீர் துளிகளுடன் - உன்
உறவுகள் இங்கே......

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 May, 2021
நன்றி நவிலல் Tue, 18 May, 2021