திதி: 20-07-2022
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புகாட்டி எம்மை ஆதரித்து
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டு ஒன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து
திரிந்த இடமெங்கும் அப்பா
உங்கள்
திருமுகம் தோன்றுதிங்கே!
நாம் இந்த மண்ணில் வாழும்வரை
நம் இதயத் தோட்டத்தில்
ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள்
நினைவுகளை
மறக்கத்தான் முடியவில்லை
பன்னிரண்டு மாதங்கள்
பட்டென்று போனதென்ன
பாசமாயிருந்து எம்மையெல்லாம்
பரிதவிக்க விட்டு நீங்கள் மட்டும்
வானகம் சென்றதென்ன- அப்பா
எங்களோடு தான் இருக்கின்றீர்கள்- ஆனால்
உருவத்தைக் காணவில்லை
மங்காத ஒளிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம் உள்ளத்தில் என்றும் அப்பாவாய்!
உங்கள் நினைவால் வாடும்
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.